• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

1789 பிரெஞ்சு புரட்சி முதல் இன்றைய மாணவர் எழுச்சி வரை… பிரான்ஸ் வீதிகளில் ஓயாத போராட்டக் கலாசாரம்! | DECODE | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
1789 பிரெஞ்சு புரட்சி முதல் இன்றைய மாணவர் எழுச்சி வரை… பிரான்ஸ் வீதிகளில் ஓயாத போராட்டக் கலாசாரம்! | DECODE | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரான்சின் இந்த போராட்ட கலாச்சாரத்திற்கு அடித்தளமே அவர்களின் புகழ்பெற்ற 1789- ஆம் ஆண்டின் பிரெஞ்சுப் புரட்சிதான். மன்னராட்சி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வெற்றி கண்ட அந்த வரலாறு, தலைமுறை தலைமுறையாக பிரெஞ்சு மக்களின் ரத்தத்தில் ஊறிப்போயுள்ளது. உலக வரலாற்றையே மாற்றியமைத்த மாணவர் மற்றும் தொழிலாளர் போராட்டம் 1968-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. கல்வி கூடங்களில் அடிப்படை வசதிகளை கேட்டு நடைபெற்ற இப்போராட்டம்  நவீன பிரெஞ்சு வரலாற்றில் மட்டுமல்லாமல், உலக வரலாற்றிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. கல்வித்துறை போராட்டமாகத் தொடங்கி, ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்கச் செய்த ஒரு புரட்சிகரமான எழுச்சியாக மாறியது.

பிரெஞ்சு புரட்சி (கோப்புப்படம்)

இந்த போராட்டம் பாரிஸ் பல்கலைக்கழகத்தில்தான் முதலில் தொடங்கியது. பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதும், காவல்துறை வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களைக் கைது செய்ததும் நிலைமையை மோசமாக்கியது. மாணவர்களின் கைதை கண்டித்து பாரிஸ் நகரின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு  காவல்துறையுடன் மோதினர். மாணவர்களின் போராட்டம் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானதைக் கண்ட பிரான்சின் தொழிற்சங்கங்கள் மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. இது பிரெஞ்சு வரலாற்றில் மிகப்பெரிய பொது வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

பிரெஞ்சு புரட்சி செய்தது என்ன?

நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் அச்சுத் துறை ஊழியர்கள் என சுமார் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரான்ஸ் முழுவதும் பொருளாதாரம் முற்றிலுமாக ஸ்தம்பித்தது; பெட்ரோல் தீர்ந்தது, பொதுப்போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

இந்த போராட்டத்தின் போது மாணவர்கள் சுவர்களில் எழுதிய “Be realistic, demand the impossible! என்ற வாசகம் உலக புகழ்பெற்றது. இப்போதும், மிகப் பெரிய போராட்டங்கள் இந்த சொற்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

அப்போதைய அதிபரும், இரண்டாம் உலகப் போரின் நாயகனுமான சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிபர் ரகசியமாக நாட்டைவிட்டு ஜெர்மனிக்குத் தப்பியோடும் சூழ்நிலை கூட உருவானது. இருப்பினும், நிலைமையைச் சமாளிக்க அவர் உடனடியாகத் தேர்தலை அறிவித்தார். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன (Grenelle Agreements).

பழமைவாத கலாசாரத்தை உடைத்தெறிந்த போராட்டம்!

இந்தப் போராட்டம்,  பிரான்சில் பல நூற்றாண்டுகளாக வேரூன்றியிருந்த பழமைவாதக் கலாச்சாரத்தை உடைத்தெறிந்தது. பெண் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மற்றும் கல்வி முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போதைய  மாணவர்களின் போராட்டமும் 1968-ன் வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டே பார்க்கப்படுகிறது. பிரான்சில் எப்போது வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் வேலைநிறுத்தம் நடைபெறும். போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் மற்றும் ஏர் பிரான்ஸ் விமானப் பணியாளர்கள் என அனைவரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாகப் பணியைப் புறக்கணிப்பார்கள்.

பிரெஞ்சு மக்களிடம் ஒரு பொதுவான கருத்து உண்டு. அது, “அரசாங்கம் நம்மிடம் இருந்து எதையாவது பறிக்கப் பார்க்கிறது என்றால், அதற்கு நாம் தெருக்களில் இறங்கித்தான் பதில் சொல்ல வேண்டும்” என்பதுதான்.

இதற்காக தெருக்களே போர்க்களம் என்று பொருள் படும்  ‘பிரி அட் பாஸ்’ (Pri et Bas) என்ற சொல்லாடலையும் பிரென்ஞ் மக்கள் வைத்துள்ளனர். பாரிஸ் நகரத்தின் புகழ்பெற்ற தெருக்களான ‘பாஸ்டில்’ (Bastille) மற்றும் ‘ரிப்பப்ளிக்’ (Republic) சதுக்கங்கள் போன்ற இடங்கள் இது போன்ற மாபெரும் போராட்டங்களுக்கு எப்போதுமே சாட்சியாக விளங்குகின்றன.

உருவானது மற்றுமொரு மாபெரும் மக்கள் இயக்கம்!

பிரான்ஸ் நாட்டில் சம காலத்தில் (நவீன காலத்தில்) மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்திய மற்றுமொரு மாபெரும் மக்கள் இயக்கம் Yellow Vests Movement. இது நவம்பர் 2018 இல் தொடங்கி நாடு முழுவதும் தீவிரமடைந்தது. பிரான்சில் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய High-visibility Yellow Vest-யை  இந்தப் போராட்டத்தின் அடையாளமாக மாற்றினர். அப்போதைய இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அரசாங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கார்பன் வரியை உயர்த்தியதே இப்போராட்டத்திற்கு காரணம். ஆரம்பத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் பொருளாதாரச் சமத்துவமின்மைக்கு எதிரான கோபமாக மாறியது.

இதையும் படிங்க: DECODE | பாரீசில் பற்றிய தீ..மாணவர்களின் கோபம் உச்சகட்டம்! France-ஐ உலுக்கிய Yellow Vests

வார இறுதி நாட்களில் பாரிஸ் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களின் வீதிகளில் மக்கள் திரண்டு சாலைகளை மறித்தனர். சுங்கச்சாவடிகளைத் தகர்த்தல் மற்றும் வாகனங்களை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சில இடங்களில் கடுமையான வன்முறையாக மாறியது. பாரிஸின் புகழ்பெற்ற ‘சாம்ஸ் எலிசீ’ (Champs-Élysées) வீதி மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்துகள், கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன; வங்கிகள், சுங்கச்சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சேதமடைந்த கட்டங்களுக்கு இழப்பீடு கொடுக்கவே அரசு திணறியது.

நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்ததால், அதிபர் இமானுவேல் மக்ரோன் அரசு எரிபொருள் வரி உயர்வைத் வாபஸ் பெறுவதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு வரிச் சலுகைகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு போன்ற சில நிவாரண அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டது. தற்போதைய மாணவர் போராட்டம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பை மையமாகக் கொண்டது போல, மஞ்சள் அங்கிப் போராட்டம் என்பது பொருளாதாரச் சுமை மற்றும் வரியினங்களுக்கு எதிரான கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களின் மாபெரும் எழுச்சியாக பிரெஞ்சு வரலாற்றில் பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தற்போது வெடித்துள்ள பள்ளி மாணவர்களின் போராட்டம் என்பது வெறும் சில வகுப்பறைக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான கோரிக்கை மட்டுமல்ல; மாறாக, அது தலைமுறை தலைமுறையாக பிரெஞ்சுச் சமூகத்தில் ஊறிப்போயுள்ள “உரிமைக் குரலின்” மற்றுமொரு பரிமாணமே ஆகும். 1789 புரட்சியின் வேர்கள், 1968 மே மாதத்தின் உத்வேகம் மற்றும் நவீன கால Yellow Vests Movement  உருவாக்கிய தாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய மாணவர்களின் எழுச்சி பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் மிகச் சிறந்த சமத்துவக் கல்வியை வழங்கிய பிரான்ஸ், இன்று நிதி நெருக்கடி, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புச் சிதைவு போன்ற காரணங்களால் தடுமாறி நிற்பதை இப்போராட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Read More

Previous Post

ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு – Sri Lanka Tamil News

Next Post

மியான்மர் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – Malaysiakini

Next Post

மியான்மர் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin