• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

“17 வயதில் எதுவுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார்”.. இன்று லிட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற “ஜோதி ஸ்டோர்” – உழைப்பால் உயர்த்த மனிதர்

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
“17 வயதில் எதுவுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார்”.. இன்று லிட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற “ஜோதி ஸ்டோர்” – உழைப்பால் உயர்த்த மனிதர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Little India: சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஜோதி ஸ்டோர் மற்றும் பூக்கடையின் நிறுவனர் திரு. முருகையா ராமச்சந்திரன் நேற்று (ஜூன் 19) இரவு காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தன் 93 வயதில் காலமானார். இந்தச் செய்தியை இந்திய பாரம்பரிய நிலையம் பகிர்ந்து கொண்டது.

அவரின் மறைவு தங்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக நிலையம் கூறியது.

17 வயதில் சிங்கப்பூருக்கு வந்தார்

1948 ஆம் ஆண்டு கையில் ஏதுமின்றி இந்தியாவில் இருந்து 17 வயதில் சிங்கப்பூருக்கு வந்த திரு. ராமச்சந்திரன், சிறிய கடையை ஜோதி ஸ்டோராக மாற்றி உழைப்பால் முன்னேறிய உண்மையான முன்னோடியாக இருந்தார்.

தற்போது அவரின் கடை லிட்டில் இந்தியாவின் கேம்பெல் லேனில் ஓர் அடையாளமாக திகழ்கிறது. அவருக்கும் லிட்டில் இந்தியா பகுதிக்கும் ஆழமாகப் பிணைப்பு எப்போதும் இருக்கும்.

“அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

Photo: Roots.sg

1960 ஜோதி ஸ்டோர் மற்றும் பூக்கடை நிறுவப்பட்டது

1960களின் முற்பகுதியில் தன் மகள் பெயரில் “ஜோதி” ஸ்டோர் என்ற சிறிய கடையை ஆரம்பித்தார் அவர். தற்போது 5 அடுக்கு மாடி கட்டடமாக கடை செயல்படுவது நாம் அறிந்தது தான்.

1986 ஆம் ஆண்டு இந்தத் தொழிலை ஏற்று நடத்திய திரு. ராமச்சந்திரனின் மகன், அதை மலேசியாவிற்கு விரிவுபடுத்தியுள்ளார்.

Google

சமூக சேவை

திரு. ராமசந்திரன் இந்திய மக்களுக்காக பெரும் உதவிகளை செய்துள்ளார், அதே போல இந்தியாவில் பள்ளிகளை கட்டிக்கொடுத்து ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியையும் ஏற்றியுள்ளார்.

உடல் தகனம்

மண்டாய் மயான சாலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும்.

Photos: Indian Heritage Center and Roots.sg

Read More

Previous Post

Paru-paru bayi maut tertindih lengan bapa ada kesan cedera | Makkal Osai

Next Post

15 நாட்களில் தக் லைஃப் படத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா.?

Next Post
15 நாட்களில் தக் லைஃப் படத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா.?

15 நாட்களில் தக் லைஃப் படத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா.?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin