லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்றுவரும் கிசான் சமான் நிதி யோஜனா திட்டத்தின் 17 -வது தவணை பணத்திற்காக பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதனை பெறுவதற்கு முன்பு விவசாயிகள் ஒரு சில முக்கியமான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறைவு செய்ய வேண்டும்.
அந்த வகையில் PM-KISAN திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு விவசாயிகள் கட்டாயமாக KYC செயல்முறையை பூர்த்தி செய்ய வேண்டும். அதனை ஆன்லைனில் எப்படி செய்யலாம் என்பது குறித்த விளக்கமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
PM கிசான் OTP அடிப்படையிலான e-KYC செயல்முறையை நிறைவு செய்வதற்கான வழிகாட்டுதல்:-
-
https://fw.pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்யவும்.
-
OTP அடிப்படையிலான e-KYC டிஸ்ப்ளே செய்யப்படும்.
-
குறிப்பிடப்பட்டுள்ள பெட்டியில் உங்களுடைய 12 -இலக்க ஆதார் எண்ணை என்டர் செய்யவும்.
-
Search’ பட்டனை கிளிக் செய்யவும்.
-
ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
-
இப்போது ‘Get OTP’ பட்டனை கிளிக் செய்க
-
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTPஐ என்டர் செய்யுங்கள்
-
e-KYC செயல்முறையை நிறைவு செய்வதற்கு ‘Submit’ என்ற ஆப்ஷனை என்டர் செய்யவும்
பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi – PM-KISAN) என்பது கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.. இந்த திட்டம் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள குறைந்த அளவிலான விவசாய நிலம் கொண்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள். எனினும் இந்த திட்டம் மூலமாக பலன் பெறுவதற்கு ஒரு சில நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க:
இந்த நாட்டில் குடியேற ஆர்வம் காட்டும் 4000 இந்திய கோடீஸ்வரர்கள்… ஏன் தெரியுமா?
இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தலா 2,000 ரூபாய் வீதம் ஓராண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கான இந்த நிதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
எனவே இதுவரை நீங்கள் இன்னும் உங்களுடைய e-KYC செயல்முறையை நிறைவு செய்யாதபட்சத்தில், மேலே கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்றி ஆன்லைனில் அதனை நீங்கள் எளிதாக செய்யலாம். இந்த e-KYC செயல்முறையை நிறைவு செய்தால் மட்டுமே பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ் உங்களுக்கான 17-வது தவணைத் தொகை டெபாசிட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
