பல கேப்டன்கள் தலைமை வகித்த அணி
ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடப்பட்ட 17 சீசன்களில் அதிக கேப்டன்கள் தலைமை வகித்த அணியாக டெல்லி கேபிடல்ஸ் இருந்து வருகிறது. 2008 முதல் 2013 வரை வீரேந்தர் சேவாக், 2014 சீசனில் தினேஷ் கார்த்திக் மற்றும் கெவின் பீட்டர்சன், 2015 சீசனில் மஹேலா ஜெயவர்த்தனே, 2016 சீசனில் ஜீன் பால் டூமினி, 2016, 2017 சீசன்களில் ஜாகீர் கான், 2018 முதல் 2020 வரை ஷ்ரேயாஸ் ஐயர், 2021, 2022, 2024 ஆகிய சீசன்களில் ரிஷப் பந்த், 2023 சீசனில் டேவிட் வார்னர் ஆகியோர் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர். தற்போது 2025 சீசனில் மற்றொரு புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்றாக டெல்லி கேபிடல்ஸ் இருந்து வருகிறது.

