இந்த விந்தணுக்களை தானமாக அளித்த நபர், தான் மாணவனாக இருந்த 2005 காலத்திலிருந்து, 2023 வரை தற்போது வரை என 17 ஆண்டுகளாக தானமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடலில் இந்த TP53 மரபணு பிறழ்வு பெரிதாக இல்லையென்றாலும்கூட, இவரது விந்தணுவில் 20% இந்த பிறழ்வு இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. என்னதான் இவருக்கு 20% தான் பிறழ்வு என்றாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் ஒவ்வொரு செல்லிலும் இது இருக்குமென்பது, சோகம் தரும் விஷயமாக உள்ளது.


