உடல் பருமன் அல்லது கூடுதல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிரமம் இருக்கும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கையாகும். பல்வேறு சிகிச்சை முறையிலோ அல்லது இயற்கையாகவோ இவர்கள் கருத்தரித்தாலும் கூட அவர்கள் பிரசவத்தில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதும் பரவலான கருத்தாக உள்ளது.
இதனிடையே ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவத்தில் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு கொண்ட மற்றும் சுமார் 160 கிலோ எடையுள்ள 33 வயது பெண் ஒருவர் வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இந்த பெண்மணிக்கு பிறந்த குழந்தையின் எடை 3.2 கிலோ ஆகும். திருமணமாகி சுமார் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள Wockhardt மருத்துவமனையில் ஆரோக்கியமான எடையில் குழந்தையை பெற்றெடுத்திருக்கும் அந்த 33 வயதான பெண்ணின் பெயர் சிம்மோரா டிசோசா, இவர் இன்டர்நேஷனல் பிபிஓ-வில் வேலைபார்த்து வருகிறார். பிரசவத்தை தொடர்ந்து தாயும், சேயும் நலமுடன் இருப்பதை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. சிம்மோரா டிசோசாவிற்கு திருமணமாகி 14 ஆண்டுகளான நிலையில், குழந்தைப் பருவத்திலிருந்தே மாதவிடாய் சிக்கல், அதீத உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளோடு சேர்த்து ஹைப்போ தைராய்டிசத்தால் பாதுக்கப்பட்டதால் கருத்தரிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வந்தார்.
தற்போது 160 கிலோ எடை உடல் எடையில் திருமதி டிசோசா இருந்தாலும் கூட, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது அதிகபட்ச உடல் எடை 185 கிலோ ஆகும். இதனால் இவருக்கு பேரியாட்ரிக் சர்ஜரி செய்யப்பட்டு உடல் எடை கணிசமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர் கருத்தரித்தார் மற்றும் இவரது கர்ப்பத்தின் கடைசி 2-3 மாதங்களில் மீரா சாலையில் உள்ள Wockhardt மருத்துவமனைக்கு ஃபாலோஅப்-பிற்காக வந்து இறுதியில் இரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனிடையே Wockhardt மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவரான மங்களா பாட்டீல் பேசுகையில், ஒரு பெண் உடல் பருமனோடு கர்ப்பம் தரிப்பது என்பது உண்மையில் அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக கருதப்படுகிறது.
ஏனெனில் இது வயிற்றில் இருக்கும் குழந்தை மற்றும் தாய்க்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதோடு பிரசவத்தையும் கூட பாதிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் உடல் பருமனான பெண்கள் கருக்கலைப்பு,குறைப்பிரசவம், கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், வலிப்பு மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறப்பது போன்ற சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தவிர அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் சூழலை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது மற்றும் சிசேரியன் செய்வதற்கான தேவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிரசவத்தின் போது மற்றும் பிரசவத்திற்குப் பின் ரத்த போக்கு ஏற்படலாம் மற்றும் blood transfusion செய்யும் தேவை ஏற்படலாம்.
இதையும் படிங்க:
வரலாற்றின் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா அழகி
சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ICU கவனிப்பும் தேவைப்படலாம். அதீத உடல் பருமன் காரணமாக பிரசவத்திற்கு பின் DVT (டீப் வெயின் த்ரோம்போசிஸ்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே உடல் பருமன் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும் முன் சரியான டயட் பிளான் பின்பற்ற, வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய மற்றும் தைராய்டு கோளாறு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதய பாதிப்பு இருந்தால் இந்த நிலைகளினால் கர்பத்தில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உரிய நிபுணரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
Morbidly Obese என குறிப்பிடப்படும் கிளாஸ் 3 ஒபிசிட்டி வகையை சேர்ந்தவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எடையை அவ்வளவு எளிதாக குறைக்க முடியாது. விரைவில் எடையை இழக்க இவர்கள் விரும்பினால் பேரியாட்ரிக் சர்ஜரி ஒரு ஆப்ஷனாகும். சிம்மோரா டிசோசா கருத்தரிக்க விரும்பினார், இதனால் பேரியாட்ரிக் சர்ஜரி செய்து தனது எடையை 185 கிலோவிலிருந்து 130 கிலோவாக அப்போது குறைத்து கொண்டார் என மங்களா கூறினார்.
அதிக ஆபத்துள்ள கர்ப்பமாக இருந்ததால் டிசோசா சரியான டயட், உடற்பயிற்சி, அடிக்கடி ஃபாலோ-அப் மற்றும் வழக்கமான அல்ட்ராசோனோகிராபி என எல்லாவற்றையும் பின்பற்றினார். ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் சராசரி எடை அதிகரிப்பு 11 கிலோவாக இருக்கும் என்றாலும் இவர் சுமார் 30 கிலோ அதிகரித்தார். இவரது பிரசவத்தை வெற்றிகரமாக செய்துள்ளதன் மூலம் எங்கள் மருத்துவமனை குழந்தைகளை பாதுகாப்பாக பிரசவிப்பதில் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்துள்ளது. அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களைக் கூட திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை எங்கள் மருத்துவமனையின் நிபுணத்துவம் உறுதி செய்கிறது என்றார்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிக எடை இருந்த போதும் சிசேரியன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ள டிசோசா பேசுகையில், எங்களின் குழந்தை கனவு பல ஆண்டுகளாக நிறைவேறாமலேயே இருந்தது. உடல் பருமன் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுடன் போராடியதோடு திருமணமாகி 14 வருடங்கள் கடந்து விட்டதால் என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஆனால் எல்லாவற்றையும் கடந்து தற்போது என் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்த பிறகு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தி டாக்டர் மங்களா பாட்டீல் மற்றும் அவரது குழுவினருக்கு தான் என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக நன்றி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
