Last Updated:
உடல் ரீதியாக டார்ச்சர் செய்து ரசித்த பெண் இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் 16 வயது சிறுவனை ஆசை வார்த்தைக் கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரின் கரிப்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான க்யாதி விஸ்வகர்மாவிற்கு, ஏற்கனவே திருமணமாகி கணவன் இருக்கிறார். இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு அதில் நேரம் செலவழித்து வந்த க்யாதிக்கு 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விடிய விடிய சேட்டிங் செய்து சிறுவனுடன் நெருக்கமாக பழகிய இவர்.. தனது பாலியல் இச்சைக்குச் சிறுவனை இரையாக்கி உள்ளார்.
நேரில் சந்திக்கலாமா? என பேசி முடிவெடுத்து சிறுவனைப் பார்க்கச் சென்ற க்யாதி விஸ்வகர்மா, போரம் தேவ் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சிறுவனை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் உடல் ரீதியாக டார்ச்சர் செய்து ரசித்த பெண் இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவன் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு காவல்நிலையம் சென்று, இளம்பெண்ணால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையைக் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனை அடுத்து உடனே விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் இளம்பெண் க்யாதி விஸ்வகர்மாவை, கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உறுதியானதைத் தொடர்ந்து இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். புகாரளித்த சிறுவனை மட்டும்தான் இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? இல்லை வேறு யாரேனும் இளம்பெண்ணால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
16 வயது சிறுவனுக்கு 25 வயது பெண் பாலியல் தொல்லை.. ஹோட்டல் அறையில் வைத்து சித்ரவதை.. அதிர்ச்சி சம்பவம்


