The post 16 மாத குழந்தைக்கு பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்த தம்பதி!! appeared first on SG Tamilan.
மலேசியாவில் போதைப்பொருள் கலந்த பாலை 16 மாத குழந்தைக்கு கொடுத்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நடந்தது.
34 வயதான அந்த பெண்ணும் அவரது 40 வயது கணவரும் மது போதையில் தற்செயலாக குழந்தையின் பாலில் போதைப்பொருளை கலந்ததாக கூறப்படுகிறது. குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தைக்கு போதைப்பொருள் தொடர்பான பாதிப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோரை 20ஆம் தேதியன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது குழந்தை அதன் பாட்டியுடன் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் RM20,000 அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் . அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
The post 16 மாத குழந்தைக்கு பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்த தம்பதி!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin