Last Updated:
பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதள தடை சட்டம் நிறைவேற்றியது. மேக்ரான் செப்டம்பரில் அமல்படுத்த வேண்டும் என அறிவித்தார்.
பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிரான்ஸில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு 15 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 116 பேரும், எதிராக 23 பேரும் வாக்களித்த நிலையில், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றபட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
பதற்றமான மனநிலைக் கொண்ட தலைமுறை உருவாவதை பிரான்ஸ் விரும்பவில்லை என்றும் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு பிறகு உலக அளவிலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாகவும், 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த பிரான்ஸ் சட்டம் கொண்டு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை.. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!


