Last Updated:
15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தது.
பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸில் வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்திருந்தார். மேலும், தங்கள் நாட்டு குழந்தைகளின் மூளை விற்பனைக்கு அல்ல என்றும், அமெரிக்கா அல்லது சீனாவில் உற்பத்தியாகும் செயலிகள் மூலம் பிரான்ஸ் குழந்தைகளின் உணர்வுகளை கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தது. அப்போது, இரு அவைகளிலும் அந்நாட்டு எம்.பி.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தும் சட்டம் அமலுக்கு வர உள்ளது.
மேலும், சமூகவலைதள நிறுவனங்கள் புதிய விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறதா என்பதை அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான ஆர்காம் (ARCOM) கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.
15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை.. பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

