சீனாவைச் சேர்ந்த ஜாங் போ – சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன. இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.


இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.