இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்தை ரிவர்ஸ் செய்வது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், நடுவர்கள் அவரை கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. அதே நேரத்தில், இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் என எதிர்பார்த்த பாகிஸ்தான் அணி கத்துக்குடி அணியான அமெரிக்காவிடம் மண்ணைக் கவ்வி, சூப்பர் 8 சுற்றுக்கே முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதனிடையே, பாகிஸ்தான் அணி இந்தியாவைப் போலவே, ஆப்கானிஸ்தான் அணியையும் எதிரி அணியாக கருதுகிறது. எனவே, அந்த அணி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும், மோசமான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் பல முன்னணி வீரர்களைப் போல, இன்சமாம் உல் ஹக்கும் கருத்துகளை தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, அர்ஷ்தீப் சிங் 15 ஓவரிலேயே பந்தை ரிவர்ஸ் செய்ய முடிந்தது எப்படி என்றும், அவர் பந்தை சேதப்படுத்தியிருப்பார் என்று மறைமுகமாக கூறிய இன்சமாம் உல் ஹக், நடுவர்கள் அவர் மீது கண்களை திறந்து வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
Also Read :
ஒரே ஓவரில் 43 ரன்கள்.. 134 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் மோசமான சாதனை – வீடியோ
“அர்ஷ்தீப் சிங் 15வது ஓவரை வீசும்போது, பந்து தலைகீழாக மாறியது. புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் முடியுமா? 12 அல்லது 13வது ஓவரிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தயாராக இருந்தது. நடுவர்கள் இதை கண்டுபிடிக்க கண்களை திறந்து வைத்துப் பார்க்க வேண்டும்” என்று இன்சமாம் உல் ஹக் கூறினார். அந்த நேரத்தில் உடனிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சலீம் மாலிக், “சில அணிகள் விளையாடும்போது, நடுவர்களின் கண்கள் மூடியிருக்கும். அந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய இன்சமாம் உல் ஹக், ஒரு பாகிஸ்தான் வீரர் இதே போன்று பந்தை மாற்றியிருந்தால், நிறைய பேர் பேசியிருப்பார்கள் என்றும், ரிவர்ஸ் ஸ்விங் எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார். மேலும், “அர்ஷ்தீப் சிங் 15வது ஓவரில் வந்து பதை ரிவர்ஸ் செய்யத் தொடங்கினால், அதற்கு முன் சில தீவிரமான வேலைகள் செய்யப்பட்டுள்ளன என்று அர்த்தம். குறிப்பாக, பந்தை ஒருபுறம் சுரண்டியிருக்கலாம். இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும்” என்று இன்சமாம் பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
