Last Updated:
பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் 2010-ல் படைத்த சாதனையையும் இவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, 2026-ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ், வெறும் 30 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். ஒட்டுமொத்தமாக 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம், ஆண்கள் U-19 உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் அதாவது 14 வயது 296 நாட்கள் அரைசதம் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக, 15 வயது 19 நாட்களில் அரைசதம் கடந்த ஆப்கானிஸ்தான் வீரர் ஷாதிதுல்லா கமலின் பெயரில் இருந்த சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.
மேலும், இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் 2010-ல் படைத்த சாதனையையும் இவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.


