நமது சூரிய குடும்பத்தைத் தாண்டி, பால்வெளியில் உள்ள லட்சக்கணக்கான கிரகங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பலமுறை பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளதால், எங்கிருந்து இந்த பறக்கும் தட்டுகள் வருகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நாசாவில், கடந்த 2023, அக்டோபரில் ‘சைக் 16’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே நிலைநிறுத்தி, தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சைக் விண்கலத்தில் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (DSOC) பொருத்தப்பட்டிருப்பதால், இதன் மூலம் லேசர் தகவல் பரிமாற்றத்தை விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகின்றன.
இந்நிலையில், சைக் விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட லேசர் சிக்னல் வெற்றிகரமாக பூமிக்கு வந்திருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அதாவது, பூமியில் இருந்து சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து இந்த லேசர் சிக்னல் வந்திருப்பதாகவும், இது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட, ஒன்றரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு தூரத்தில் இருந்து அனுப்பப்பட்ட லேசர் சிக்னல், பூமிக்கு வெறும் 8 நிமிடங்களில் வந்திருப்பதாக கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள், இதன் மூலம் தகவல் தொடர்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், விண்வெளியில் ஏலியன்களின் தகவல் பரிமாற்றத்தை கண்டறியவும் இது உதவும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
