Last Updated:
வாட்டிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் 14ஆம் லியோ புதிய போப் ஆக பதவியேற்றார். இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றார்.
வாட்டிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ பதவியேற்றுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காலமான நிலையில், புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் கடந்த 8 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், வாட்டிகனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் புதிய போப் ஆக 14ஆம் லியோ பதவியேற்றுள்ளார்.
போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, போரால் பாதிக்கப்பட்ட ரஷ்யா, உக்ரைன் மக்களுக்காக அவர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். புதிய போப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் பங்கேற்றார்.
May 18, 2025 10:15 PM IST
14ஆம் லியோ புதிய போப் ஆக பதவி ஏற்பு.. இந்தியாவில் சார்பில் பங்கேற்ற மாநிலங்களவை துணைத் தலைவர்

