நடிகை சித்தாரா 90களில் கனவு கன்னியாக வலம் வந்து, ஹோம்லி குயின் என பெயர் எடுத்தார். திருமணம் செய்தால், இவரைப்போல பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டுமென கொள்ளை கொண்ட இளைஞர்களின் மனதில் இடம் பிடித்திருந்த சித்தாரா, திருமணம் செய்து கொள்ளாமல் முதிர் கன்னியாக யாருக்காக வாழ்ந்து வருகிறார் என்பதைபார்க்கலாம்.
1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த கிளிமனூர் என்ற சிறிய ஊரில் பிறந்தவர் தான் சித்தாரா. பரமேஸ்வரன் நாயர் மற்றும் வல்சலா தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார்.
இவருக்கு இரண்டு தம்பிகளும் உண்டு. சித்தாராவின் தந்தை பரமேஸ்வரன் நாயர் கேரளாவில் மின்சாரத் துறையில் பொறியாளராக பணியாற்று வந்தார். சித்தாராவின் தாயாரும் அதே மின்சாரத் துறையில் அலுவலராக பணியாற்றினார். இருவருக்கும் அரசு பணி என்பதால், தங்களுடைய குழந்தைகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது இவர்களது ஆசையாக இருந்தது.
நடிகை சித்தாராவிற்கு பள்ளிகள் படித்துக் கொண்டு இருக்கும் போதே, நடனத்தில் மீது ஈடுபாடு இருந்ததால், நாட்டியத்தை கற்றுக் கொண்டு, தனது 13வது வயதில், அரங்கேற்றமும் செய்தார். அந்த நேரத்தில் தான், மலையாள திரைப்படம் ஒன்றில், குடும்ப பங்கானா முகம் வேண்டும் என பட குழுவினர். புதுமுகத்தை தேட, படத்தின் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தியின் கண்களில் பட்டார் சித்தாரா.
உடனே படக்குழுவினர் சித்தாராவின் அப்பாவிடம் சென்று அனுமதி கேட்க, சினிமாவில் நடிக்க வைக்க விருப்பம் இல்லை, என் மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்பது என் ஆசை என கூறி மறுத்து இருக்கிறார். ஆனால், படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தியதால், வேறு வழியே இல்லாமல் இந்த ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சினிமாவில் தனது மகளை நடிக்க அனுமதித்துள்ளார்.
1986ஆம் ஆண்டு மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்த காவேரி என்ற திரைப்படத்தின் 13வது வயதில், சித்தாரா நடிகையாக அறிமுகம் ஆனார். காவேரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு சித்தாராவை தேடி வந்தன. ஓர் இடத்தில், பொண்ணு, முக்தி, படபுத்ரா என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார் சித்தாரா.
மலையாளத்தில் கொடி கட்டிப்பறந்த சித்தாரா, தமிழில் புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்த தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார் சித்தாரா. அதன் பின் புது வசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இருவாசல் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், காலத்தின் ஓட்டம் காரணமாக திடீரென சித்தாராவிற்கு படவாய்ப்புகள் குறைந்து போக, அக்கா, தங்கை, அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிலும் வாய்ப்பு இல்லாததால், கங்கா யமுனா சரஸ்வதி என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய சித்தாரா, பராசக்தி, கவரிமான் என பல சீரியல்களில் நடித்தார்.
கணவருக்குத் தெரியாமல் நடிகை ஸ்ரீதேவி செய்த அந்த விஷயம்.. இதெல்லாம் நடந்திருக்கா?
சினிமாவில் சித்தாரா பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த நேரத்தில் தான் சித்தாராவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்துவிட, ஒட்டுமொத்த குடும்ப சுமையும் இவர் மேல் விழுந்துள்ளது. குடும்பத்திற்கான நிற்காமல் ஓடத்தொடங்கிய சித்தாரா, அப்பாவின் ஆசைப்படி தனது தம்பியை மருத்துவராக்கி அழகு பார்த்துள்ளார்.
குடும்பத்திற்கு தூணாக இருந்த சித்தாரா உருகு உருகி ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், அந்த காதல் தோல்வி அடைய அவரின் நினைவாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். திருமணம் குறித்து ஒருமுறை பேசி இருந்த சித்தாரா, என்னை திருமணம் செய்து கொள்ள பலர் முன்வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதால் நான் மறுத்துவிட்டேன் என்றார். தற்போது வரையும் திருமணம் செய்து கொள்ளாமல் முதிர் கண்ணியாகவே இருக்கிறார் சித்தாரா.