• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

12 வருட சாதனையை இழந்த இந்தியா.. புனே டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
12 வருட சாதனையை இழந்த இந்தியா.. புனே டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா, அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது இந்திய அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது.

விளம்பரம்

அணியின் ஸ்கோர் 231ஆக உயர்ந்தபோது, டாம் பிளண்டல் 41 ரன்களிலும் கிளென் பிலிப்ஸ் 48 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் 255 ரன்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் , சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரே கைப்பற்றினர். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் வேகம் புனே மைதானத்தில் எடுபடமால் போனது.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணி 34 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரோஹித் சார்மா 8 ரன்களில் சண்டனர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்திய அணியை சுப்மன் கில் மற்றும் ஜெய்ஷ்வால் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க ஆரம்பித்தது.

இருவரும் அதி ரடியாக விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியா 96 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இந்த நல்ல தொடக்கத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள தவறினர்.

விளம்பரம்

விராட் கோலி 17ரன்னிலும், ரிஷப் பந்த் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 3 சிக்சர் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னும், சர்ப்ராஸ் கான் 9 ரன்னும் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். 37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தேநீர் இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது.

விளம்பரம்

60.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

2- ஆவது இன்னிங்ஸில், அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் 29 ஓவர்கள் வீசி 104 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மேலும் 12 ஆண்டுகளாக உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடையாத அணி என்ற இந்திய அணியின் சாதனையை நியூசிலாந்து தகர்த்துள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

’அங்கிள்’ என அழைத்த கடைக்காரரை அடித்து உதைத்த வாடிக்கையாளர்!

Next Post

அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு ரூ.10 குறைவு: தொழில் துறையினர் நிம்மதி | After 6 Months the Price of Yarn is Reduced by Rs.10

Next Post
அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு ரூ.10 குறைவு: தொழில் துறையினர் நிம்மதி | After 6 Months the Price of Yarn is Reduced by Rs.10

அனைத்து ரக நூல் விலையும் கிலோவுக்கு ரூ.10 குறைவு: தொழில் துறையினர் நிம்மதி | After 6 Months the Price of Yarn is Reduced by Rs.10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin