Last Updated:
12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா தணித்துள்ளார்.
12 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு ஆஸ்திரேலியர் கூட சதம் அடிக்கவில்லை என்ற ரசிகர்களின் ஏக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் மேட்ரென்ஷா தணித்துள்ளார்.
ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் 9ஆவது விக்கெட்டுக்கு கரம் கோர்த்த நாதன் லியோன் – மேட் ரென்ஷா இணை 134 ரன்கள் சேர்த்து, வெளிநாட்டில் நடக்கும் போட்டியில் 9ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஆஸ்திரேலியர்கள் எனும் சாதனை படைத்தனர். மேட் ரென்ஷா 190 ரன்கள் சேர்த்து அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 390 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
தென்னாப்பிரிக்காவின் வையான் முல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மூன்றாம் நாளான இன்று தென்னாப்பிரிக்கா ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 149 ஆண்டுகளில் முதல்முறையாக, 11 வீரர்களையும் 30 வயதை கடந்தவர்களாக களமிறக்கி ஆஸ்திரேலியா புதிய சாதனை நிகழ்த்தி உள்ளது. எனினும், அணியில் ஒரு இளம் வீரர் கூட இல்லாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


