Last Updated:
கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இன்றைய நாட்களில் அதிகரித்து வரும் செலவுகளால் சேமிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தம் தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. இது மாதிரியான சூழ்நிலையில் சாமானிய மக்கள் பாதுகாப்பான, அதே நேரத்தில் தங்களுடைய பணத்தை பல மடங்கு அதிகரித்து தரக்கூடிய முதலீட்டு விருப்பங்களை எதிர்பார்க்கின்றனர் என்பதில் எந்தவொரு ஆச்சரியமும் கிடையாது.
அந்த வகையில் தபால் நிலையத்தில் கிடைக்கும் கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டமானது உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக வழங்குவதற்கு உதவுகிறது. இந்த அரசு திட்டம் மூலமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்கள், அதாவது 115 மாதங்களில் இரட்டிப்பாக்கலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் 1988ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் கிடைப்பதால் மிகவும் பாதுகாப்பான ஒரு முதலீடாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் உங்களால் குறைந்தபட்சமாக 1000 ரூபாயை முதலீடு செய்ய முடியும். மேலும், இதற்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அதாவது சிறிய முதலீட்டாளர்கள் 1000 ரூபாய் முதலில் இருந்து முதலீடு செய்யலாம். அதே சமயம் பெரிய முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பலன் பெறலாம்.
தற்போது கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. அதாவது, உங்களுடைய வட்டியானது முதல் தொகையோடு சேர்க்கப்பட்டு, அதற்கான வட்டியானது தொடர்ந்து வழங்கப்பட்டு வரும். இதன் காரணமாகவே உங்களுடைய முதலீடு வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாகிறது. உதாரணமாக, நீங்கள் 8,000 ரூபாயை முதலீடு செய்தால் மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 16,000 ரூபாய் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- அடையாள சான்றிதழ்: ஆதார் அட்டை, PAN கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம்
- முகவரி சான்றிதழ்: ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் அல்லது மின்சார கட்டணம் செலுத்தியதற்கான ரசீது
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கு PAN கார்டு கட்டாயமாக தேவை.
- 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மென்ட் அல்லது ITR போன்ற வருமான நிரூபணத்தை வழங்க வேண்டும்.
முதலீடு செய்வதற்கு ஒருவர் அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கி கிளையில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை (படிவம் A) பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தில் பெயர், முகவரி, மொபைல் நம்பர், முதலீட்டுத் தொகை, பேமென்ட் செலுத்தும் வழி மற்றும் நாமினி தகவல்கள் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். KYC ஆவணங்களையும் ஒருவர் சமர்ப்பிக்க வேண்டும். 50,000 ரூபாய் வரை உங்களால் கேஷாக டெபாசிட் செய்ய முடியும். இதைவிட அதிகமான தொகையை முதலீடு செய்வதற்கு செக், டிமாண்ட் டிராஃப்ட் அல்லது RTGS, NEFT போன்ற ஆன்லைன் வழிகளைப் பயன்படுத்தலாம். சரிபார்க்கும் முறை நிறைவு செய்யப்பட்டதும் உங்களுக்கு கிசான் விகாஸ் பத்திரம் சான்றிதழ் வழங்கப்படும். இதனை நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
August 21, 2025 2:20 PM IST
115 மாதங்களில் முதலீடு இரட்டிப்பு… அற்புதமான தபால் நிலைய சேமிப்புத் திட்டம்…! வட்டி மற்றும் ரிட்டன்கள்…


