
February 05, 202510:19 AM IST
Tamil Live Breaking News: ஈரோடு கிழக்கு: 10.9 சதவீத வாக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி ஒன்பது ஐந்து சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். ஈரோடு சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதலாவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் வாக்களித்தார். 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுயில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகளிலும் காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். ஈரோடு சம்பத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதலாவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் வாக்களித்தார். 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

