கடந்த 1963ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன் பின் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தனியாக விண்வெளி பயணம் சென்று திரும்பியுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம, நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது.
அதன்படி, விண்வெளிப் பயணத்தில் புது முயற்சியாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை இந்த நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்தக் குழுவில், பாப் பாடகி கேட்டி பெர்ரி, பத்திரிகையாளர் கேல் கிங், வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்படத் தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவை வழிநடத்த ஜெஃப் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸ் உடன் சென்றார்.
பாப் பாடகியும் அவரது குழுவினரும் பூமியின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு (100 கிலோ மீட்டர்) உயரத்தில், அமேசான் நிறுவனருக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினில் இருந்து ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இந்த விமானம் பயணிகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லையான கர்மன் கோட்டிற்கு அப்பால் கொண்டு சென்றது. மேற்கு டெக்சாசில் உள்ள நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட விண்கலம் ஏறத்தாழ 107 கிலோ மீட்டர் பயணித்து புவிவட்ட பாதையை சென்றடைந்தது.
Also Read: உலகின் முதல் பெண்கள் குழு.. பாடகி உட்பட 6 பெண்கள் அடங்கிய குழு விண்வெளி சுற்றுப்பயணம்!
பூமியின் வளிமண்டலத்துக்கு மேல் உள்ள கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த பெண்கள் குழு, விண்வெளியில் இருந்தபடி பூமியின் அற்புதமான காட்சிகளை கண்டு களித்தனர். 11 நிமிடங்கள் கொண்ட விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மகளிர் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. பெர்ரி மற்றும் அவரது குழுவினர் உட்பட, 2021இல் சிவிலியன் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து ப்ளூ ஆரிஜினின் விண்கலத்தில் 58 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
யார் முன்பதிவு செய்யலாம்?
எந்தவொரு நபரும் ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் வலைத்தளத்தில் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பட்டியலிடும் படிவத்தை பயணிகள் நிரப்ப வேண்டும். முக்கியமாக, இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
பயணச் செலவு?
இதற்கான பயணச் செலவு மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் முழு தகவலை வெளியிடவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் விண்வெளிக்கு பயணம் செய்ய அனைவரும் மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த வேண்டியதில்லை. ஸ்டார் ட்ரெக் நட்சத்திரம் வில்லியம் ஷாட்னர் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் மைக்கேல் ஸ்ட்ராஹான் போன்ற பிரபலங்கள் ப்ளூ ஆரிஜினின் விருந்தினராக நியூ ஷெப்பர்ட் துணை ஆர்பிட்டல் ஏவுதள வாகனத்தில் இலவசமாகப் பறந்ததாகக் கூறப்படுகிறது.
சிஎன்என் அறிக்கையின்படி, ஏப்ரல் 14 விமானத்தில் கூட, சிலர் இலவசமாக” பறந்தனர் என்றும், அவர்களின் பயணத்திற்கு யார் பணம் செலுத்தினார்கள் என்பதை நிறுவனம் கூற மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
April 16, 2025 1:14 PM IST

