Last Updated:
நேற்று மட்டும் உள்நாட்டு விமான நிறுவனங்களின் 410 விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 444 விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக 11 நாடுகளின் வான்வழி போக்குவரத்தை தற்காலிகமாக தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகள் திடீரென மூடப்பட்டு, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், குவைத் மற்றும் கத்தார் ஆகிய 11 நாடுகளின் வான்வெளியை தவிர்க்குமாறு விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
விமான சேவை
ஏற்கனவே ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. நேற்று மட்டும் உள்நாட்டு விமான நிறுவனங்களின் 410 விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று 444 விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“11 நாடுகளின் வான்வெளியை தவிர்த்திடுங்கள்” – விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தல்!


