இந்தியாவில் அமைப்புசார்ந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் EPFO அமைப்பில், EPF பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு (EPF Scheme) நிதி திட்டம், 1952 – இன் கீழ், ரூ.15,000 வரை மாத ஊதியம் பெறும் எவரொருவரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேர முடியும். அவர், சேர்வது சட்டப்பூர்வ தேவையாகும். அதன்படி, அடிப்படை ஊதியம், அகவிலைப்படி மற்றும் தக்கவைப்பு படி உள்ளிட்ட 12% ஊதியத்தை பங்களிக்க வேண்டும்.பணயமர்த்தும் நிறுவனம் சார்பில் இருந்து ஊழியருக்கு 12% பங்களிப்பு செய்யும். தன்னுடைய 58 வயது பூர்த்தியானவுடன் இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.


