Last Updated:
மத்திய அமைச்சரவை 100 பின்தங்கிய வேளாண் மாவட்டங்களை மேம்படுத்த ‘தன் தான்யா கிரிஷி யோஜனா’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் தன் தான்யா கிரிஷி யோஜனா பின்தங்கிய 100 வேளாண் மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மேலும், முதற்கட்டமாக ஆறு ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக திட்டங்களை செயல்படுத்த மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2025-26 முதல் 6 ஆண்டுகளுக்கு 100 மாவட்டங்களை உள்ளடக்கிய ‘பிரதரின் தன்-தான்யா க்ரிஷி யோஜனா’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தன் தான்யா க்ரிஷி யோஜனா திட்டத்தின் மூலம், ஏற்கனவே 11 துறைகளில் இருக்கும் 36 திட்டங்கள், மாநில திட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
மேலும், குறைந்த உற்பத்தித்திறன், குறைந்த கடன் வழங்கல் உள்ளிட்ட 3 முக்கிய குறிகாட்டிகளின் அடிப்படையில் 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, திட்டத்தை திறம்பட திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றிற்காக மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு தன்-தான்யா மாவட்டத்திலும் திட்டத்தின் முன்னேற்றம் 117 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் கண்காணிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம், விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை அதிகரித்தல், பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் கிடைப்பதை எளிதாக்குதல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
July 16, 2025 3:32 PM IST
100 வேளாண் மாவட்டங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்; மாவட்டம் முதல் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும்