உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட அவரது வெற்றியை சட்டமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆஜ் தக் உடனான உரையாடலில் , பிந்து தனது பயணத்தை பகிர்ந்துள்ளார். இந்த மைல்கல்லை அடைய பல மாத கடின உழைப்பு தேவைப்பட்டதாக கூறினார். பிண்டுவும் அவரது குடும்பத்தினரும் நைனியின் அரைல் பகுதியில் வசித்து வருகின்றனர். அவரது பெரிய குடும்பத்தில் சுமார் 100 பேர் உள்ளனர். இந்நிலையில், அவர்கள் ஒன்றாக இணைந்து, மகா கும்பமேளா தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராக தொடங்கினார்களாம். இந்த பிரமாண்டமான நிகழ்வின் போது யாத்ரீகர்களை ஏற்றிச் செல்ல 130 படகுகளை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் அந்த குடும்பம் முதலீடு செய்தது.
தாயின் நகைகள் அடமானம்
இதற்கு நிதி திரட்டுவதற்காக, பிண்டு தனது தாயின் நகைகளை கூட அடமானம் வைத்தார். ஆரம்பத்தில், அவரது தாயார் பணத்தை இழந்துவிடுவோமோ என்று கவலைப்பட்டுள்ளார். ஆனால் மகா கும்பமேளா நிகழ்வில் அவர்கள் நன்றாக சம்பாதிக்கத் தொடங்கியதும், அவரது பயம் மகிழ்ச்சியாக மாறியது. வருமானத்தை விட, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் கடின உழைப்பையும் வெற்றியையும் தனிப்பட்ட முறையில் அங்கீகரித்ததில் அந்த குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ரூ.30 கோடி சம்பாதித்து சாதனை
பிண்டு கூறுகையில், 45 நாட்கள் நீடித்த மகா கும்பமேளா நிகழ்வின்போது அவரது குடும்பத்தினர் தங்கள் 130 படகுகளை இயக்கியதன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் சம்பாதித்தனர். அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கேட்டபோது, அவர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே பின்பற்றுவதாகவும், ஒருபோதும் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Also Read: இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கும் – பிரதமர் மோடி
இதற்கிடையே, சில பக்தர்கள் அவர்களுக்கு நன்கொடையாக கூடுதல் பணத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஒரு படகு கட்டுவதற்கு தோராயமாக ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை செலவாகும். ஆனால் திருவிழாவின் போது, ஒவ்வொரு படகும் ஒரு நாளைக்கு ரூ.50,000க்கும் மேல் வருவாய் ஈட்டியது. ஒரு மாதத்திற்கு மேல், ஒரு படகு ரூ.23 லட்சத்தை ஈட்டியது. இது 130 படகுகளிலிருந்தும் மொத்தம் ரூ.30 கோடியை ஈட்டி உள்ளது.
மகாகும்பமேளாவின் போது, அதிகாரப்பூர்வ படகு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.483 என நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், பயணிகளிடம் ஒரு பயணத்திற்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 பேர் அமரக்கூடிய படகில், ஒவ்வொரு பயணியும் ரூ.1,500 செலுத்தினால், ஒரு பயணத்திற்கான வருவாய் ரூ.15,000ஆக இருந்தது. தினமும் பல பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், வருமானம் விரைவாகப் பெருகியது.
100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தை சேர்ந்த பிண்டு மல்லா, இந்த நிகழ்வின் போது அனைவரும் அயராது உழைத்ததாக தெரிவித்தார். பிண்டுவின் குடும்பம் மட்டும் சொந்தமாக 70 படகுகளை வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 20 படகுகளை வைத்திருந்தன.
March 06, 2025 9:04 AM IST

