Last Updated:
தமிழ்நாட்டில் 30 ஆயிரத்து 529 தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 லட்சம் போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் மோசடிகளை தடுக்க அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இதன்மூலம் தகுதியற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் கடந்த 14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 27 லட்சம் தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
November 17, 2025 3:42 PM IST


