• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100 நாள் வேலை ஊதியத்தில் ரூ.7 உயர்வு; மோடி அரசு ரூ.700 கோடிக்கு விளம்பரம் செய்யும் – ராகுல் சாடல்

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
100 நாள் வேலை ஊதியத்தில் ரூ.7 உயர்வு; மோடி அரசு ரூ.700 கோடிக்கு விளம்பரம் செய்யும் – ராகுல் சாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியத்தை 319 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக 2005ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் மாறும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தினசரி ஊதிய தொகையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

விளம்பரம்
பால்கனி கார்டனுக்கு ஏற்ற 5 உயரமான செடிகள்.!


பால்கனி கார்டனுக்கு ஏற்ற 5 உயரமான செடிகள்.!

அதன்படி, தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டு 281 ரூபாயில் இருந்து 294 ரூபாயாக ஊதியம் அதிகரிக்கப்பட்டது. தற்போது, 100 நாள் வேலைக்கான தினசரி ஊதியத்தில் மேலும் 25 ரூபாயை அதிகரித்து மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், 100 நாள் திட்டத்தின் தினசரி ஊதியம் 319 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை 7 ரூபாய் உயர்த்தி விட்டு, 700 கோடி ரூபாய்க்கு பிரதமர் மோடி விளம்பரம் செய்ய இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கான ஊதியத்தை 3 முதல் 10.5 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ள மத்திய அரசு, உத்தரப் பிரதேசத்தில் 7 ரூபாய் மட்டுமே ஊதியம் உயர்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை 7 ரூபாய் உயர்த்தியதற்கு வாழ்த்துகள் என்று சாடியுள்ளார். இவ்வளவு அதிகத் தொகையை வைத்துக் கொண்டு, மக்களே என்ன செய்யப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பலாம் எனவும் ராகுல் விமர்சித்துள்ளார். அதே சமயம், இந்த ஊதிய உயர்வை வைத்து, 700 கோடி ரூபாய் செலவு செய்து, பிரதமருக்கு மக்கள் நன்றி சொல்வது போன்று பாஜக விளம்பரங்கள் செய்யும் என்றும் ராகுல் சாடினார்.

News18

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன், 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை நாளொன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டுமென ராகுல் காந்தி  குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 21 ஆலயங்களில் 07 விடுவிக்கப்படும்

Next Post

தன் மீது வீசியெறிந்த கற்களை பூக்களாக மாற்றிய ரியான் பராக் | ஐபிஎல் அலசல் | Riyan Parag Turned Stones Thrown at him into Flowers IPL Analysis

Next Post
தன் மீது வீசியெறிந்த கற்களை பூக்களாக மாற்றிய ரியான் பராக் | ஐபிஎல் அலசல் | Riyan Parag Turned Stones Thrown at him into Flowers IPL Analysis

தன் மீது வீசியெறிந்த கற்களை பூக்களாக மாற்றிய ரியான் பராக் | ஐபிஎல் அலசல் | Riyan Parag Turned Stones Thrown at him into Flowers IPL Analysis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin