• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100 நாள் வேலைத் திட்டத்தின் சிற்பி… ஆனால் டெல்லி போராட்டத்தில் வெளிநாட்டினர் என நினைத்து கைது செய்யப்பட்ட அவலம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
100 நாள் வேலைத் திட்டத்தின் சிற்பி… ஆனால் டெல்லி போராட்டத்தில் வெளிநாட்டினர் என நினைத்து கைது செய்யப்பட்ட அவலம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 9:04 PM IST

பெல்ஜியம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இயல்பாகவே ஐரோப்பியத் தோற்றத்தில் இருப்பார்

News18
News18

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் குவிந்த இளைஞர்களைக் காவல்துறை உடனுக்குடன் கைது செய்து அப்புறப்படுத்தியதுடன், அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவையும் கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் போராடிய 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காவல்துறை குண்டுக்கட்டாகக் கைது செய்தது. அதேபோன்று, சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸை (Jean Drèze) காவல்துறை சிறைபிடித்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இயல்பாகவே ஐரோப்பியத் தோற்றத்தில் இருப்பார். இதனால், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்குக் கூட அவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. அவரை ஒரு சாதாரண ‘வெளிநாட்டவர்’ என்றும், இதில் ஏதோ ‘அந்நிய சதி’ இருக்கிறது என்றும் அவர்கள் சந்தேகித்த விவகாரமே தற்போது பேசுபொருளாகி வருகிறது.

யார் இந்த ஜீன் ட்ரெஸ்? பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர், இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் குறித்த பொருளாதார ஆய்வுகளில் தீராத ஈடுபாடு கொண்டவர். அந்த ஆய்வின் காரணமாக, 1979-ம் ஆண்டு முதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார். 2002-ம் ஆண்டு முறைப்படி இந்தியக் குடியுரிமையும் பெற்றார். உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையாக இருந்தும், சமூக களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். சமூகத்தில்  பிரதி கூலம் எய்தியோர், வலுவிழந்தோர்,ஒடுக்கப்பட்டோர், நிராகரிப்புக்கு உள்ளானோர் முதலியானோருக்கான குரலாக ஒலித்து வருகிறார்.

இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை’  வடிவமைத்தவர்களில் ஜீன் ட்ரெஸ் முக்கியமானவர். ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்தில் அவர் நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் இருந்த கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அவரது இந்த முயற்சிகளே, ரேஷன் திட்டத்தை மேலும் வலுப்படுத்தப் பெரிதும் உதவின.

#WATCH | Delhi: At Jantar Mantar, where Cockroach Janta Party (CJP) has called a protest, economist Jean Drèze says, “On behalf of all those who are not able to reach here because of the incredible display of force, which is completely out of proportion. The reason why the government is so afraid is not that there is any risk of violence or any security risk, it is that the government is afraid that the people of this country will understand that their right to vote is being taken away.”


— ANI (@ANI) October 10, 2026

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து பணியாற்றி வரும் இவர், அவருடன் சேர்ந்து பல முக்கியப் பொருளாதார நூல்களையும் (Uncertain Glory of India) எழுதியுள்ளார். வெறும் பொருளாதார புள்ளிவிவரங்களை மட்டும் வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை அளவிட முடியாது; கல்வி, சுகாதாரம், சமத்துவம், அடித்தட்டு மக்களின் சமூக மேம்பாடு ஆகியவையே உண்மையான வளர்ச்சி என்பதை இருவரும் ஆணித்தரமாக உலகிற்கு உணர்த்தினர்.

It is hardly surprising that power in India lies in the hands of the uneducated.

A journalist does not even know who he is?


Jean Drèze is a renowned welfare economist!

#Jantarmanatar https://t.co/4XnTNJDIiw

— Surya Yadav (@suryaupse) October 10, 2026

தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஜீன் ட்ரெஸ். பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, மாநிலப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட ‘பொருளாதார ஆலோசனைக் குழுவில்’ (EAC-CM) எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோருடன் இவரும் முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடிப்பு: பயணிகள் வெளியேற்றம், விமான சேவைகள் ரத்து – Sri Lanka Tamil News

Next Post

போர்ச்சுகல் அணியிலிருந்து ரொனால்டோ சஸ்பெண்ட்.. ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கால்பந்து சம்மேளனம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
போர்ச்சுகல் அணியிலிருந்து ரொனால்டோ சஸ்பெண்ட்.. ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கால்பந்து சம்மேளனம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

போர்ச்சுகல் அணியிலிருந்து ரொனால்டோ சஸ்பெண்ட்.. ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கால்பந்து சம்மேளனம்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin