• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் 100 நாட்களைக் கடந்து, நேற்று (08) 101ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அவற்றில் 506 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 47ஆவது நாளான நேற்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் எழுமாறாக தோண்டப்பட்ட இரண்டு சோதனைக் குழிகளில், ஒரு சோதனைக் குழியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதிக்குட்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது – Sri Lanka Tamil News

Next Post

China | இனி செல்லப் பிராணிகளால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்… அசத்திய சீன விஞ்ஞானிகள்! | Pet Dogs | World News (உலக செய்திகள்)

Next Post
China | இனி செல்லப் பிராணிகளால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்… அசத்திய சீன விஞ்ஞானிகள்! | Pet Dogs | World News (உலக செய்திகள்)

China | இனி செல்லப் பிராணிகளால் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்... அசத்திய சீன விஞ்ஞானிகள்! | Pet Dogs | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin