தற்போது கடைகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால், இது செல்லாது என்று கூறி கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், 10 ரூபாய் நாணயம் தற்போதும் புழக்கத்தில் உள்ளது. வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் இந்த நாணயங்களைப் பார்க்கும்போது, எது அசல், எது போலி நாணயம் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் குழப்பத்தின் காரணமாக, பல வியாபாரிகளும் பொதுமக்களும் இந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். ஆனால், இந்த நாணயங்கள் உண்மையிலேயே தடை செய்யப்பட்டவையா?, இதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்று தற்போது பார்ப்போம்.


