சிங்கப்பூர்: 10 வயது சிறுவனை காணவில்லை என்று காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சுல்ஃபி அம்சி அப்துல்லா என்ற அந்த சிறுவனை யாரேனும் கண்டால் அல்லது இருக்கும் இடம் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம்.
கனமழை காரணமாக சாலையில் விழுந்த மரம்.. இருவர் சிக்கி விபத்து
சிறுவன் கடைசியாக, கடந்த அக்.22 ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் லோயர் டெல்டா சாலையின் 48வது புளாக்கில் காணப்பட்டார்.
கடந்த அக்.13 ஆம் தேதியும் சிறுவனை காணவில்லை என போலீசார் செய்தி வெளியிட்டனர். அப்போது சில மணிநேரங்களுக்குப் பின்னர் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீண்டும் சிறுவனை காணவில்லை என்ற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற காவல்துறை ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகள் – இண்டிகோ அறிவிப்பு
The post 10 வயது சிறுவனை காணவில்லை: கண்டுபிடிக்க உதவுங்கள் appeared first on Tamil Daily Singapore.

