ஸ்ரேயன் டாகா என்பவர் மிகச் சிறிய வயதிலேயே இளம் தொழிலதிபராகி ஒரு குறிப்பிட்டத்தக்க சாதனையை படைத்துள்ளார். சிறு வயதில் இருந்தே தனக்கு பிடித்தமான விஷயத்தை செய்து அதன் மூலமாக பணமும் சம்பாதித்து வருகிறார் இவர்.
10 வயது இருக்கும்பொழுது இவர் தனது பெயிண்டிங்கை 9000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதே வயதில் கோடிங் கற்று தனது முதல் வெப்சைட்டையும் உருவாக்கியுள்ளார். பள்ளியில் உள்ள பிள்ளைகளுக்கு அதிக வட்டி விகிதங்களில் கடன்களையும் இவர் வழங்கி வந்துள்ளார்.
தனது 13 ஆம் வயதில் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்டர்ன்ஷிப் செய்து தனது தந்தையிடம் இருந்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். முழுக்க முழுக்க தனது நிறுவனத்தை கவனித்துக் கொள்வதற்காக பத்தாம் வகுப்பில் தனது பள்ளி படிப்பை நிறுத்தி உள்ளார்.
கொரோனா பரவி வந்த சமயத்தில் மாணவர்களுக்கு படிப்பை தவிர இதர செயல்பாடுகளை வெரிஃபை செய்யப்பட்ட ஆன்லைன் படிப்புகளாக கற்பிப்பதில் ஸ்ரேயன் ஆசிரியர்களுக்கு உதவி வந்துள்ளார். இந்த படிப்புகள் பிள்ளைகளுக்கு முக்கியமான திறன்களை வளர்ப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவும் அமைந்தது.
பள்ளிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை ஆன்லைன் லைவ் கற்பிக்கும் வகுப்புகள் மூலமாக இணைத்து, எந்தவிதமான படிப்புகளை தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் அமையும் என்பது குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இவ்வாறு இவர் நடத்திய ஒவ்வொரு லைவ் செஷனிலும் 5 முதல் 15 பிள்ளைகள் பங்கேற்பார்கள். இதில் ஒவ்வொரு நபருக்குமான கட்டணம் 133 ரூபாய். ஒரு செஷனில் 15 நபர்கள் பங்கேற்றால் ஒரு செஷனுக்கு இவருக்கு 2000 ரூபாய் கிடைக்கும். இவரது யோசனை அனைவராலும் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஷார்க் டேங்க் இந்தியா நிறுவனத்தில் 5% பங்குகளுடன் வினீதா சிங் மற்றும் பியூஷ் பன்சால் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இதன்மூலம் இவரது நிறுவனத்தின் மதிப்பு 6 கோடி ரூபாயாக இருந்தது.
Also Read : என்னது மஞ்சள் நிறத்தில் தர்பூசணியா… இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா?
10 வயதிலேயே 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் இந்த ஸ்ரேயன் தாகா நிச்சயமாக சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக அமைகிறார். பிடித்தமான விஷயங்களை செய்து கூட வாழ்க்கையில் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம். விடா முயற்சியும், கடுமையான உழைப்பும் இருந்தால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதையும் தாண்டி தற்போது ஸ்மார்ட்டாக இருக்க வேண்டிய கட்டாயமும் இருந்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…