• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

10 மாதங்களுக்கு பிறகு கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் பின்னணி!

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
10 மாதங்களுக்கு பிறகு கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் பின்னணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர். இதே கல்லூரியில் பயின்றும் வரும் 24 வயதான மாணவி ஒருவர், கடந்த புதன் கிழமை அன்று தேர்வு விண்ணத்தை பூர்த்தி செய்து கொடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த கல்லூரி ஊழியர் ஒருவர், இரு மாணவர்களுடன் சேர்ந்து அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு, பாதுகாவலர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் வைத்து அடித்து, மிரட்டி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கஸ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கல்லூரியில் பணியாற்றி வரும் 31 வயதான மனோஜித் மிஸ்ரா என்பது தெரியவந்தது.

மேலும் அவருடன் வந்தவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் 20 வயதான பிரமித் முகர்ஜி மற்றும் 19 வயதான ஜைப் அகமது என்பது தெரியவந்தது. இதில், முக்கிய குற்றவாளியான மனோஜித், முன்னாள் மாணவர் என்பதுடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பின் நிர்வாகி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர், சட்டக் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அந்த மாணவி, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும், மாணவிக்கு தொடர்ந்து மனோஜித் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான் சம்பவத்து அன்று இரவு 7.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்கு மாணவி தனியாக நடமாடியுள்ளார். அப்போது, அங்கு வந்த மனோஜித், இரு மாணவர்களின் உதவியுடன் அவரை மிரட்டி தனி அறைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை, வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அவர்களிடம் இருந்து மாணவி தப்பிக்க முயன்றபோது, ஹாக்கி மட்டையால் அடித்து நிலைகுலைய செய்துள்ளனர். பின்னர், நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி ஊழியர் உட்பட 3 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இச்சம்பவம் நிகழ்ந்து 10 மாதங்களே ஆன நிலையில், தற்போது கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி, கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Kolkata,West Bengal

First Published :

June 27, 2025 10:19 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கல்லூரி வளாகத்திலேயே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்!

Read More

Previous Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

Next Post

தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது | Gold prices continue to decline

Next Post
தங்கம் விலை தொடர்ந்து சரிவு – 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது | Gold prices continue to decline

தங்கம் விலை தொடர்ந்து சரிவு - 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது | Gold prices continue to decline

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin