ஜோகூரில் சுமார் 10 கிலோவுக்கு மேல் போ*தைப்பொருள் கடத்தியதாக ஆடவர் ஒருவர் மீது இன்று (மே 6) குற்றம் சாட்டப்பட்டது.
வேலையில்லாமல் அவர் இருந்ததாகவும், மேலும் நான்கு வகையான போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தில் செண்டு, மிட்டாய்களை திருடிய வெளிநாட்டவர் கைது
குற்றச் செயல்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு 10 மணியளவில் டங்கா பேயில் உள்ள வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
47 வயதுமிக்க சிங்கப்பூரரான டான் பான் சூன் மீது 10.024 கிலோ தூள் போதைப்பொருளை கடத்தியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 15 பிரம்படிகளுக்குக் குறையாமல் தண்டனை விதிக்கப்படலாம்.
போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், RM100,000 (US$23,677) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், மூன்று முதல் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

