• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

10 இன்னிங்ஸில் 5 டக் அவுட்.. மீண்டும் பிரச்சனையை தொடங்கிய சஞ்சு சாம்சன்.. வெளிநாடுகளில் சொதப்பல்! | Sanju Samson: 5 Ducks, 2 Tons in Last 10 Overseas Innings, Sanju Samson’s Inconsistency Sparks Huge Debate

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
10 இன்னிங்ஸில் 5 டக் அவுட்.. மீண்டும் பிரச்சனையை தொடங்கிய சஞ்சு சாம்சன்.. வெளிநாடுகளில் சொதப்பல்! | Sanju Samson: 5 Ducks, 2 Tons in Last 10 Overseas Innings, Sanju Samson’s Inconsistency Sparks Huge Debate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Thursday, July 2, 2026, 9:36 [IST]

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெளிநாடுகளில் கடைசியாக ஆடிய 10 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் 3 இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்திலும், 2 இன்னிங்ஸில் சதமும் அடித்திருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனிடம் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 47 பந்துகளில் 68 ரன்களையும், அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்களையும் எடுத்தனர்.

Sanju Samson

கடைசி நேரத்தில் சிவம் துபே 21 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சஞ்சு சாம்சனிடம் மீண்டும் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை தொடங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வதில் சில தடுமாற்றங்களை சந்தித்து வருவதாக தெரிகிறது. ஏனென்றால் கடைசியாக வெளிநாடுகளில் ஆடிய 10 இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் 5 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். ஒரே ஆண்டில் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர்களின் பட்டியலில் ஏற்கனவே இணைந்திருந்தார் சஞ்சு சாம்சன்.

தற்போது வெளிநாட்டு மண்ணிலும் தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்து வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த 10 இன்னிங்ஸ்களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன், அதே வேளையில் 2 இன்னிங்ஸ்களில் பிரம்மாண்ட சதங்களையும் விளாசித் தள்ளியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். அதன் அடிப்படையில் தான் வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்பாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஃபார்மின்றி சொதப்பினால், அடுத்த சில போட்டிகளிலேயே சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

English summary

Sanju Samson: 5 Ducks, 2 Tons in Last 10 Overseas Innings, Sanju Samson’s Inconsistency Sparks Huge Debate

Read More

Previous Post

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி – இருவர் காயம்

Next Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin