Last Updated:
8 பேர்கள் கொண்ட கமிட்டி ஐசிசி தலைமைச் செயலர் சஞ்சய் குப்தா தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கிறது
ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை டி20 போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படாமல் இருக்கும் சூழலில் மீண்டும் அந்த தொடரை ஆரம்பிப்பது குறித்து ஐசிசி விரைவில் முடிவு எடுக்கவுள்ளது.
கிளப் அணிகள் பங்கேற்கும் சர்வதேச டி20 போட்டிகள் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தன. கடைசியாக இந்த போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடின. இதில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அந்த தொடருக்கு பின்னர் இதுவரை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடர் நடத்தப்படவில்லை. 2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் ஆறு எடிஷன்களாக இந்த சாம்பியன்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த போட்டித் தொடரை இந்தியா 4 முறையும் தென்னாப்பிரிக்கா இரண்டு முறையும் நடத்தியது.
அதன் பின்னர் பார்வையாளர்கள் குறைந்ததன் காரணமாகவும், ஸ்பான்சர்ஷிப் கிடைக்காததன் காரணமாகவும் சாம்பியன்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. இந்த தொடரில் அதிகபட்சம் 3 ஐபிஎல் அணிகள் மட்டுமே விளையாடியது. மற்ற அணிகள் வெளிநாட்டு அணிகள் என்பதால் அந்த அணிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை ஆரம்பிக்கலாமா என்பது குறித்து ஐசிசி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
July 21, 2025 3:53 PM IST


