• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!! | The Rashmika Mandanna Effect: How Her Star Power Drives ₹3,815 Crore Box Office Success

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!! | The Rashmika Mandanna Effect: How Her Star Power Drives ₹3,815 Crore Box Office Success
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!!

ராஷ்மிகா மந்தனா National Crush என அழைக்கும் அளவுக்கு நாடு முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர். கிரிக் பார்ட்டி என்ற கன்னட மொழி திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் தான் ரஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய அவருடைய திரைப் பயணம் இந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து விட்டது.

கன்னடத் திரையுலகில் இருந்து தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் மாஸ் ஹிட் ஆனது. இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனா நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தன. தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்தார். ராஷ்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த புஷ்பா, அனிமல் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியாவிலேயே அதிக டிமாண்ட் கொண்ட ஒரு நடிகை என்ற பெருமை ராஷ்மிகாவுக்கு கிடைத்திருக்கிறது.

10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!!

அண்மையில் தான் ராஷ்மிகா தனது காதல் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். ராஷ்மிகா பாலிவுட்டில் பல்வேறு படிங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த காக்டெய்ல் 2 (Cocktail 2) திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், அவரது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை 3,815 கோடியை ரூபாயை தொட்டுள்ளது.

ஷாஹித் கபூர், கிருத்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள காக்டெயில் 2 திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், உலகளவில் முதல் இரண்டு நாட்களில் 50.95 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் ராஷ்மிகா ‘தியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!!

இதன் மூலம் ராஷ்மிகா மந்தனா நடித்த திரைப்படங்களின் ஒட்டுமொத்த உலகளாவிய வசூல் 3,815 கோடி என்ற பிரம்மாண்ட தொகையை எட்டியுள்ளது. குறிப்பாக புஷ்பா 2 படம் உலகளவில் மிகப்பாரிய வெற்றியைப் பெற்று, சுமார் 1,742.10 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. புஷ்பா 1 படம் உலகளவில் 350.10 கோடி ரூபாய் வசூல் செய்தது.

அனிமல் , சீதா ராமம் என ராஷ்மிகா நடித்த மற்ற பான்-இந்தியா படங்களின் மாபெரும் வெற்றி என அனைத்தையும் சேர்த்தால் இவர் நடித்த படங்களின் ஒட்டுமொத்த வசூல் 3,815 கோடி ரூபாய் என்ற அளவி தொட்டுள்ளது. 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் படைத்த மூன்று அடுத்தடுத்த ஹிட் படங்களை கொண்ட ஒரே நடிகை என்ற சாதனையும் ராஷ்மிகா படைத்துள்ளார்.

திரையுலகில் ராஷ்மிகா மந்தனாவை ‘நேஷனல் கிரஷ்’ (National Crush) என்று அழைக்கிறார்கள். அவர் ஒரு படத்தில் நடித்தாலே, அந்தப் படம் வணிகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிடுகிறது என்பதை திரையுலகினர் “ராஷ்மிகா மந்தனா எஃபெக்ட்” என்று குறிப்பிடுகிறார்கள். அவரது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆதரவு ஆகியவை அவரை இந்திய சினிமாவில் அதிக மார்க்கெட் கொண்ட முன்னணி நடிகையாக மாற்றியுள்ளது. தற்போது ஒரு படத்திற்கு இவர் 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் சுமார் 66 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article

English summary

The Rashmika Mandanna Effect: How Her Star Power Drives ₹3,815 Crore Box Office Success

10 ஆண்டுகளில் ரூ.3,815 கோடி பிஸ்னஸ்..!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!! – Known as Bollywood’s “box office queen,” Rashmika has amassed over ₹4,824 crore worldwide post-COVID with hits like Animal, Pushpa 2, and Chhaava. This latest success reinforces her status as the only actress with three ₹500 crore+ blockbusters.

Story first published: Sunday, June 21, 2026, 13:42 [IST]

Other articles published on Jun 21, 2026

Read More

Previous Post

Cricket | 19 வயது… உலகையே மிரள வைத்த சம்பவம்.. 38 வருஷமாக உடைக்காத இந்திய வீரரின் மெகா சாதனை!

Next Post

சில தலைவர்கள் பரப்பும் வெறுப்புணர்வுக்கு அப்பாற்பட்டு உயர்ந்து நில்லுங்கள் – அன்வார்  – Malaysiakini

Next Post

சில தலைவர்கள் பரப்பும் வெறுப்புணர்வுக்கு அப்பாற்பட்டு உயர்ந்து நில்லுங்கள் – அன்வார்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin