Last Updated:
அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அமெரிக்காவில் லட்சக்கணக்கானோரை “பாம் சைக்ளோன்” (Bomb Cyclone) எனும் பனிப்புயல் பாடாய்ப்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிப்புயல் வீசி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தையும் கடந்து பனிப்புயல் வீசியதால் சாலைகள் எங்கும் வெண்ணிறப் படலமாகவே காட்சி தருகின்றன. சாலைகளில் படர்ந்த பனித்துகள்களை ஊழியர்கள் கடும் பாடுபட்டு அகற்றி வருகின்றனர். இதனால் பல லட்சம் வீடுகள் மின்சார விநியோகத்தை இழந்து இருளில் தவிக்கின்றன. சுமார் 10 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
வீடற்ற மக்களைக் கட்டாயமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி உத்தரவிட்டுள்ளார். இந்தக் களேபரத்திலும் நியூயார்க் நகரில் போலீசார் பனிக்கட்டிகளை வீசியெறிந்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவை ஆட்கொண்ட பனிப்புயல்… கடும் பாதிப்பில் மக்கள்!


