• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

₹62 லட்சம் வீட்டுக் கடனில் ₹32 லட்சம் வட்டிப் பணத்தை சேமிக்க சூப்பரான ஐடியா இருக்கு… தெரிஞ்சுக்கலாமா…?

GenevaTimes by GenevaTimes
May 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
₹62 லட்சம் வீட்டுக் கடனில் ₹32 லட்சம் வட்டிப் பணத்தை சேமிக்க சூப்பரான ஐடியா இருக்கு… தெரிஞ்சுக்கலாமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால், அப்படி இல்லாவிட்டாலும் கூட வட்டி தொகையை குறைப்பதற்கு கடன் பெறுநருக்கு பல்வேறு வழிகள் உள்ளன. கடனை முழுமையாக முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவது, மற்றொரு கடனை குறைந்த வட்டியில் வாங்குவது, மாதத் தவணை தொகையை அதிகரிப்பது, டவுன் பேமெண்ட் வழங்குவது மற்றும் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் போன்றவை இதில் அடங்கும். இந்தப் பதிவில் நாம் கடனை முன்கூட்டியே செலுத்தும் திட்டமான ப்ரீ பேமெண்ட் பற்றி பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் 62 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனில் 32 லட்ச ரூபாய் வட்டித் தொகையை எவ்வாறு சேமிக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டுக் கடனுக்கான ப்ரீ பேமெண்ட் என்பது உங்களுடைய வீட்டுக் கடனை ஒரேயடியாக அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேமெண்ட்கள் மூலமாக முழுமையாக அடைப்பது. இவ்வாறு செய்வது ஒரு பெரிய அளவிலான தொகையை சேமிப்பதற்கு உதவும். ஆனால், ப்ரீ பேமெண்ட் செலுத்துவதற்கான ஒரு சில விதிமுறைகள் உள்ளன.

ப்ரீ பேமெண்ட் செலுத்துவதற்கான நிபந்தனைகள்:

பொதுவாக ப்ரீ பேமெண்ட் செலுத்துவதற்கு 1 முதல் 3 வருடங்கள் லாக்-இன் பீரியட் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், ஒரு பெரிய அளவில் ப்ரீ பேமெண்ட் செலுத்தி உங்களுடைய கடன் அக்கவுன்ட்டை முன்கூட்டியே மூடுவதற்கு நீங்கள் திட்டமிட்டால், அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். மேலும், ஒரு குறைந்தபட்ச ப்ரீ பேமெண்ட் தொகையை கடன் வழங்குநர்கள் நிர்ணயித்து இருக்கலாம். ஆகையால், ப்ரீ பேமெண்ட் செலுத்துவதற்கு முன்பு இந்த மாதிரியான நிபந்தனைகளை சரிபார்ப்பது ஒரு பெரிய அளவிலான வட்டி தொகையை சேமிப்பதற்கு உதவும். ப்ரீ பேமெண்ட் செலுத்திய பிறகு, கடன் வழங்குநர் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்களை வழங்குவார்.

ஒன்று உங்களுடைய EMI-ஐ குறைத்துக் கொள்வது அல்லது மற்றொன்று கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை குறைத்துக் கொள்வது. உங்களுடைய EMI தொகையை குறைத்தால், உங்களுடைய வட்டி தொகை குறையும். ஆனால், உங்களுடைய கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் அப்படியே மாறாமல் இருக்கும். எனினும், EMI தொகையை மாற்றாமல் இருந்தால், உங்களுடைய வட்டி மற்றும் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகிய இரண்டும் குறையும்.

கணக்கீடுகள்:

62 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 25 வருடங்களுக்கு 10 சதவீத வட்டியில் நீங்கள் வாங்கி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இங்கு கடன் பெறுநர் சமமான தொகையை 3 ப்ரீ பேமெண்ட்களில் செலுத்துவதாக கருதுவோம். இந்த மொத்த ப்ரீ பேமெண்ட் என்பது கடன் தொகையில் 10%. எனவே, 62 லட்சம் கடனுக்கு நீங்கள் 2,06,667 ரூபாய் வீதத்தில் 3 தவணையாக மொத்தம் 6.2 லட்ச ரூபாயை ப்ரீ பேமெண்டாக செலுத்தி இருப்பீர்கள்.

வீட்டு கடனுக்கான EMI மற்றும் வட்டி:

இந்த மாதிரியான கடனுக்கு தோராயமான EMI என்பது 56,339 ரூபாயாக இருக்கும். இதற்கான வட்டி என்பது ₹1,07,01,834 மற்றும் மொத்தமாக ₹1,69,01,834 ஆக இருக்கும். இதில் முதல் ப்ரீ பேமெண்டை கடன் ஆரம்பித்ததில் இருந்து 3 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு செய்வீர்கள். இரண்டாவது ப்ரீ பேமெண்டை 4 வருடங்கள் கழித்தும், மூன்றாவது ப்ரீ பேமெண்டை 5 வருடங்கள் கழித்தும் செய்வீர்கள். எனவே, உங்களுடைய வீட்டுக் கடனை மே 2025-ல் ஆரம்பித்து இருந்தால், முதல் ப்ரீ பேமெண்டை மே 2028லும், இரண்டாவது ப்ரீ பேமெண்டை மே 2029லும், மூன்றாவது ப்ரீ பேமெண்டை மே 2030லும் செய்வீர்கள்.

EMI தொகையை குறைத்தால்:

இந்த சூழ்நிலையில் உங்களுடைய EMI தொகை என்பது ₹5,905 ரூபாயாகவும், இதனால் நீங்கள் சேமித்த வட்டி ₹8,61,571 ஆக இருக்கும்.

EMI தொகையை மாற்றாமல் வைத்திருந்தால்:

இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தால், உங்களால் மொத்தமாக ₹31,35,124 சேமிக்க முடியும் மற்றும் தோராயமாக 66 மாதங்களுக்கு முன்னதாகவே உங்களுடைய கடனை அடைத்து முடிப்பீர்கள்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

₹62 லட்சம் வீட்டுக் கடனில் ₹32 லட்சம் வட்டிப் பணத்தை சேமிக்க சூப்பரான ஐடியா இருக்கு… தெரிஞ்சுக்கலாமா…?

Read More

Previous Post

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி… பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

Next Post

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

Next Post
கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin