இன்றைய காலகட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், டிஷ்யூ பேப்பர் பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், கஃபேக்கள், ஸ்டார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் டிஷ்யூ பேப்பர் தவிர்க்க முடியாத அன்றாடப் பொருளாக மாறியுள்ளது. இதனால் குறைந்த முதலீட்டில் தொடங்கி, தொடர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய சிறந்த சிறுதொழில்களில் ஒன்றாக டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில் பார்க்கப்படுகிறது.


