• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

₹18,000 fare for a 400-meter journey: Mumbai taxi driver cheats American female tourist-400 மீட்டர் பயணத்திற்கு ரூ.18000 கட்டணம்:அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சிடிரைவர்

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
₹18,000 fare for a 400-meter journey: Mumbai taxi driver cheats American female tourist-400 மீட்டர் பயணத்திற்கு ரூ.18000 கட்டணம்:அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சிடிரைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரிடம் டாக்சி டிரைவர் ஒருவர் ஏமாற்றி இருக்கிறார்.

அர்ஜெண்டினா அரியானோ என்ற அந்த பயணி எக்ஸ் தளத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் சமீபத்தில் மும்பை வந்தேன். ஹில்டன் ஹோட்டலுக்கு செல்ல டாக்சியில் ஏறினேன். இரண்டு பேர் என்னை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்று 200(ரூ.18000) அமெரிக்க டாலர் பெற்றுக்கொண்டு என்னை ஹோட்டலில் கொண்டு போய்விட்டனர்.

ஆனால் அந்த ஹோட்டல் நான் ஏறிய இடத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது”‘ என்று குறிப்பிட்டு டாக்சி நம்பரையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பதிவு வைரலானது. டாக்சி டிரைவர் பெண் சுற்றுலா பயணியை டாக்சியில் ஏற்றி 20 நிமிடம் சுற்றிவிட்டு அப்பயணியை ஏற்றிய இடத்திற்கு அருகில் கொண்டு வந்து ஹோட்டலில் இறக்கிவிட்டுள்ளார். அமெரிக்க பெண்ணின் பதிவை தொடர்ந்து மும்பை போலீஸார் தாங்களாக இதனை விசாரிக்க ஆரம்பித்தனர்.

டாக்சி பதிவு எண் அடிப்படையில் அதன் டிரைவர் தேஷ்ராஜ்(50) என்பவரை கைது செய்தனர். அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர். இப்புகார் குறித்து விசாரிக்கும்படி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் என்பவரிடம் துணை போலீஸ் கமிஷனர் மனீஷ் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் போலீஸார் அமெரிக்க சுற்றுலா பயணி தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று தகவல்களை சேகரித்தனர். அவர் ஜனவரி 12ம் தேதி ஹோட்டலுக்கு வந்துள்ளார். அடுத்த நாளே ஹோட்டலை காலி செய்துவிட்டு புனே சென்றுள்ளார். அங்கிருந்து அவர் அமெரிக்கா சென்றுவிட்டார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறுகையில்,” பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்று வருகிறோம். அவர் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூட கூறவில்லை” என்றார்.

Read More

Previous Post

Property Rules | தந்தை சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு? இந்த ஒரு தவறை நீங்கள் செய்தால், சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது! | வணிகம் போட்டோகேலரி

Next Post

நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு: ஆயுதப் படை மேஜர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜர்! | Makkal Osai

Next Post
நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு: ஆயுதப் படை மேஜர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜர்! | Makkal Osai

நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு: ஆயுதப் படை மேஜர் ஜெனரல் நீதிமன்றத்தில் ஆஜர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin