Last Updated:
Onion Prices Drop| தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 5 கிலோ ரூ.100-க்கும் கிடைக்கிறது.
மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட், தென் மாவட்டங்களின் முக்கிய காய்கறி விற்பனை மையமாக விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பல்வேறு காய்கறிகள் தினமும் அதிகளவில் இங்கு கொண்டு வரப்பட்டு, மொத்த மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உசிலம்பட்டி, சத்திரப்பட்டி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் அதிகரித்துள்ளதால், வெங்காய வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. அதிக உற்பத்தி காரணமாக மார்க்கெட்டில் வெங்காயம் குவிந்து, விலை குறைவுக்கு வழிவகுத்துள்ளது.
தற்போது, சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கும், 5 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 என்ற மலிவான விலையில் கிடைக்கிறது. சமீப காலங்களில் உயர்ந்திருந்த விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களிலும் வெங்காய விலை குறைந்த நிலையிலேயே நீடிக்கும் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து மலிவான விலையில் காய்கறிகளை பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Apr 03, 2026 10:06 AM IST

