Last Updated : 15 Mar, 2025 12:51 AM
Published : 15 Mar 2025 12:51 AM
Last Updated : 15 Mar 2025 12:51 AM

ஹைதராபாத்: ஹோலி பண்டிகை நேற்று ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தூல்பேட்டை மல்சா புரம் எனும் இடத்தில் நடந்த ஹோலி கொண்டாடத்தில் குல்ஃபி ஐஸ்கிரீம்கள், பர்பிக்கள், சில்வர் காகிதத்தில் ஒட்டப்பட்டிருந்த இனிப்பு உருண்டைகள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் கஞ்சா கலந்திருப்பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசியமாக சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு விழா ஏற்பாடு செய்த சத்யநாராயண சிங் என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதன் பின்னனியில் இருப்பது யார்? கஞ்சா எங்கிருந்து வந்தது என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
FOLLOW US
தவறவிடாதீர்!