Last Updated:
ஈரான் – ஓமன் ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிட்டால் ஓமன் மீது குண்டு வீசுவோம் என அந்நாட்டை எச்சரித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிட்டால் ஓமன் மீது குண்டு வீசுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். மேற்காசிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களுக்கு முக்கிய வழித்தடமாக ஹோர்மூஸ் நீரிணை விளங்குகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதித்துள்ளது.


