அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதாக மிரட்டிய நிலையில் அவ்வழியே தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
“சர்வதேச சமூகத்தின் பொது நலனுக்காக ஜலசந்தியைப் பாதுகாப்பாகவும் திறந்த நிலையிலும் வைத்திருப்பது அவசியம்” என்றும் சீனா தெரிவித்துள்ளது.
குறித்த விடயங்களை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
ஈரானைப் பணிய வைக்க முடியாது
ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை குறித்த அச்சுறுத்தல்கள் ஈரானின் பேச்சுவார்த்தை நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் உலக ஆய்வுகள் பீடத்தின் இணைப் பேராசிரியர் ஜொஹ்ரே கராஸ்மி தெரிவித்துள்ளார்.
BREAKING: China has called for unobstructed navigation through the Strait of Hormuz, a day after US President Donald Trump threatened to blockade it.
FM spokesman Guo Jiakun said keeping the strait secure and open is in the “common interest of the international community.” pic.twitter.com/b2wbe6WIr2
— Al Jazeera Breaking News (@AJENews) April 13, 2026
ஈரானைத் தனது நிலைப்பாட்டிலிருந்து மாற்றக் கட்டாயப்படுத்த முடியும் என அமெரிக்கா “மிகப் பெரிய அளவில் தவறாகக் கணக்கிடுகிறது”. எதிர்காலத்தில் இத்தகைய அழுத்தங்கள் மூலம் ஈரானைப் பணிய வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

