ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கரோலினாவின் மிர்டில் பீச்சில் நடைபெற்ற ஒரு பேரணியில் அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஈரான் குறித்து அந்தப் பேரணியில் ட்ரம்ப் பேசியதாவது:
அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது
அவர்கள் (ஈரான்) அணு ஆயுதம் வைத்திருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருந்தால் நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும். இனி அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது.

ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் ஈரானியர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த ஒப்பந்தம் நமக்குத் தேவைப்படுமா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் தற்போது ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். அது ஒரு அமெரிக்கப் பிரதேசம்.
ஹோர்முஸ் நீரிணை எங்கள் முழு கட்டுப்பாட்டில்
என்ன நடக்கப்போகிறது என்று நாம் பார்ப்போம். ஈரான் எல்லைகளையும் ஹோர்முஸ் நீரிணையையும் நாங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

