ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாகவும் உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அரசியல் இணைப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ் விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈரானின் இந்த நடவடிக்கை, கடல்சார் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையை (UNCLOS) மிகத் தெளிவாக மீறுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடல்சார் போக்குவரத்து
மேலும், இதன் பாதிப்புகள் இந்த நீரிணையோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்திற்கும் ஹோர்முஸ் நீரிணையில் மட்டுமன்றி உலகெங்கிலும் உள்ள இது போன்ற அனைத்து முக்கிய கடல்சார் போக்குவரத்து நெரிசல் வழிகளிலும் பெரும் வணிக நலன்கள் உள்ளன.
மேலும் உதாரணமாக மத்திய தரைக்கடலுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல் போக்குவரத்து குறித்து இதே போன்றதொரு கட்டுப்பாட்டு அறிவிப்பை ஸ்பெயின் நாடு வெளியிட்டால் எப்படி இருக்குமோ அதே போன்றதொரு ஆபத்தான சூழலையே ஈரானின் தற்போதைய நடவடிக்கையும் ஏற்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

