ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்துப் போக்குவரத்திற்கும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் கடல்வழி முற்றுகையை நடைமுறைப்படுத்த தொடங்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது .
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகிய அறிக்கையில்,
ஈரானிய துறைமுகங்கள்
“அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரானிய துறைமுகங்கள் உட்பட, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் எதிராக இந்த முற்றுகை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.

ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லாத அல்லது அங்கிருந்து வராத கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையின்றிச் செல்ல முடியும்.
மேலும், இந்த முற்றுகை அந்தக் கப்பல்களின் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தைத் தடுக்காது” என்றுள்ளது.
இதன்படி ஈரான் மீதான தனது செல்வாக்கை வாஷிங்டன் தீவிரப்படுத்த முற்படுவதால் , எண்ணெய் விலையை உயர்த்தக்கூடிய ஒரு நடவடிக்கையாக, இன்று முன்னதாக ஹோர்முஸ் நீரிணையில் ட்ரம்ப் முற்றுகையை அறிவித்ததைத் தொடர்ந்து சென்ட்காம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

