இந்தியாவில் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பது பலரது கனவு. நமக்கென்று சொந்தமாக ஒரு குடிசையாவது இருக்க வேண்டும் என்ற மனநிலை பலருக்கு இருப்பதுண்டு. ஆனால் வீடு கட்டுவது என்பது சாதாரணப்பட்ட காரியம் அல்ல. வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு வீடு கட்டுவதற்கு துவங்கி விட்டாலே பணம் எப்படி செலவாகிறது என்பதே தெரியாத அளவிற்கு கையை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்து விடும். பலர் தங்களது சொந்த வீட்டு கனவை நினைவாக்குவதற்கு ஹோம் லோன் நாடுகின்றனர். ஆனால் அவ்வாறு ஹோம் லோனை பெற்று வீடு கட்டியவுடன் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு திணறுகின்றனர். எனவே ஹோம் லோன் எடுப்பதற்கு முன்பு அந்த கடனை வாங்குவதற்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்வது அவசியம். அந்த வகையில் ஒருவேளை நீங்கள் ஹோம் லோன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளீர்கள் என்றால் பின்வரும் ஒரு சில விஷயங்களை கருத்தில் கொள்வது உங்களுக்கு உதவியாக அமையும்:
டவுன் பேமெண்டை சமாளிப்பது
ஹோம் லோன் வாங்கும் பொழுது உங்கள் வீட்டிற்கான ஆரம்ப கட்ட முதலீட்டை நீங்கள் டவுன் பேமெண்டாக செலுத்த வேண்டும். அந்த வகையில் நீங்கள் வாங்கப் போகும் சொத்தின் மதிப்பில் 10 முதல் 20 சதவீதம் டவுன் பேமெண்ட் ஆக வழக்கமாக வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு கடன் வழங்குனரை பொறுத்து மாறுபடலாம். ஒரு சில சூழ்நிலைகளில் அரசு திட்டங்கள் மூலமாக பெறப்படும் கடன்களில் 5 முதல் 10% டவுன் பேமெண்ட் பெறப்படுகின்றன.
நீங்கள் பெரிய ஒரு தொகையை டவுன் பேமெண்டாக செலுத்தி விட்டால் உங்களுடைய கடன் தொகை குறைந்து, மேலும் வட்டியும் குறைகிறது. ஆனால் நீங்கள் பெரிய டவுன் பேமெண்ட் செலுத்துவதற்கு உங்களிடம் அதிக முதலீடு இருக்க வேண்டும். டவுன் பேமெண்ட் செலுத்துவதற்காக வேறு ஒரு கடனை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் இந்த டவுன் பேமெண்டிற்கான கடனையும் ஹோம் லோனுக்கான கடனையும் தனித்தனியாக செலுத்த வேண்டி இருக்கும்.
சேமிப்பதற்கான உங்களுடைய திறன்
ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது எப்படி சேமிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் அதிக வருமானம் பெறக்கூடிய ஒருவராக இருந்தால் உங்களுக்கு பெரிய அளவிலான தொகை கடனாக வழங்கப்படும். வலுவான சேமிப்பு பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக நீங்கள் எதிர்கால பொருளாதார சூழ்நிலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை சேமிப்பாக வைப்பது சிறந்தது. அப்படி இல்லை என்றால் தொடர்ச்சியாக சிறு சிறு அளவிலான சேமிப்புகள் கூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
EMI களை சரியான நேரத்தில் செலுத்துதல்
EMI செலுத்துவது என்பது குறிப்பிடத்தக்க ஒரு பொருளாதார சம்பந்தப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் திட்டமிடுதல் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதன் மூலமாக அதனை நீங்கள் சிறப்பாக சமாளிக்கலாம். சொத்து அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காக லோன் வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் முன்பு அடுத்த 3 முதல் 5 வருடங்களுக்கு உங்களுடைய வழக்கமான செலவுகளில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் EMI-களை செலுத்தக்கூடிய அளவிற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டும். அதன் பிறகு தான் நீங்கள் கடன் வாங்குவதற்கான செயல்முறைகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
இதையும் படிங்க:
தந்தை உயில் எழுதாத சொத்தில் திருமணமான மகளுக்கு பங்கு கிடைக்குமா..? சட்டம் சொல்வது இதுதான்?
வாழ்க்கை என்பது எதிர்பாராத சவால்கள் நிறைந்தது. எனவே அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க கூடிய வகையில் உங்களிடம் சேமிப்புகள் இருக்க வேண்டும்.
ஜாயிண்ட் லோன் அப்ளிகேஷன்களை கையெழுத்திடுதல்
பணிக்கு செல்லக்கூடிய உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் இணைந்து ஜாயிண்ட் ஹோம் லோனுக்கு விண்ணப்பிப்பது உங்களுக்கு பல்வேறு பலன்களை அளிக்கக்கூடும். உங்கள் இருவரின் வருமானங்களையும் இணைக்கும் பொழுது உங்களுடைய லோன் விண்ணப்பத்திற்கு பெரிய அளவிலான தொகை அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இதனால் நீங்கள் உங்களுக்கு ஏற்றார் போல பெரிய அளவிலான வீட்டை கூட வாங்கலாம். மேலும் இரு வருமான மூலங்களை நீங்கள் காட்டும் பொழுது உங்களுக்கு சாதகமான வட்டி விகிதங்கள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படும்.
உங்களுடைய தற்போதைய கிரெடிட் ஸ்கோர்
ஹோம் லோன் மற்றும் அதன் நிபந்தனைகளை நிர்ணயம் செய்வதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. 700-க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நல்ல ஸ்கோர் ஆக கருதப்படுகிறது. உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதங்கள், குறைந்த ப்ராசஸிங் கட்டணங்கள் மற்றும் கடன் நிபந்தனைகள் விதிக்கப்படும். மறுபுறம் உங்களிடம் 600க்கும் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அதிக வட்டி விகிதங்களை நீங்கள் செலுத்த நேரிடலாம்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே ஹோம் லோன் எடுப்பது என்பது மிகவும் கவனமாகவும் மற்றும் முன்னேற்பாடுடனும் நீங்கள் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருளாதாரம் முடிவு. முன்னெச்சரிக்கையாக இல்லாமல் தேவையில்லாமல் கடன் வலைக்குள் மாட்டி சிக்கி தவித்தவர்கள் ஏராளமானோர். எனவே பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு அதன் பிறகு ஹோம் லோன் வாங்குவதற்கான முடிவை எடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…