• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஹோம் லோன், கார் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு..!! | RBI Repo Rate Set to Hit 5.75% by December: Home Loan, Car Loan EMIs to Rise

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஹோம் லோன், கார் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு..!! | RBI Repo Rate Set to Hit 5.75% by December: Home Loan, Car Loan EMIs to Rise
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோம் லோன், கார் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி என்ன முடிவெடுக்கும் என்பது தான் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் நம் வீட்டு கடன், வாகன கடன் உள்பட வங்கியில் நாம் வாங்கும் அனைத்து கடன்களின் வட்டிகளும் உயரும்.

நாட்டின் பணவீக்க நிலவரம், தேசிய பொருளாதார சூழல், உலக பொருளாதார சுழல் , ஈரான் போரால் ஏற்பட்டுள்ள தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவையே எடுக்கும். அந்த வகையில் வரவிருக்கும் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ரிசர்வ் வங்கி இருப்பதாக வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்கள் கணிக்கின்றன.

ஹோம் லோன், கார் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு..!!

பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை இருமுறை உயர்த்தக்கூடும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.75% என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த பிரபல தரகு நிறுவனமான நோமுரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தலா 25 அடிப்படை புள்ளிகள் வீதம் உயர்த்தக்கூடும். அதாவது, மொத்தமாக 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு, தற்போதுள்ள ரெப்போ விகிதம் 5.75 சதவீதத்தை எட்டும் என கூறுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலைவாசி குறியீட்டு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டில் இது 6.3 சதவீதமாக உயரும் என நோமுரா கணித்துள்ளது. அதன் பின் பணவீக்கம் குறையும் என்பதால் வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பில்லை என்றும் ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு முறை வட்டி உயர்வு 100% சாத்தியம் என தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம், மோசமான பயிர் உற்பத்தி, அதிகரித்து வரும் உணவு பொருட்கள் விலை மற்றும் மக்களின் குறைந்த செலவு திறன் போன்ற காரணங்களால், அடிக்கடி வட்டி விகிதங்களை உயர்த்துவது பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறக்கூடும் என்பதால் ரிசர்வ் வங்கிக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது ஃபுளோட்டிங் முறையில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ சுமையை அதிகரிக்கக்கூடும். ஏனெனில் ரெப்போ வட்டி என்பதே ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் தான். எனவே வங்கிகள் தாங்கள் கொடுக்கும் வட்டி விகிதம் உயர்ந்தால் தாங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களையும் உயர்த்திவிடும்.

Share This Article

English summary

RBI Repo Rate Set to Hit 5.75% by December: Home Loan, Car Loan EMIs to Rise

ஹோம் லோன், கார் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு..!!/ The Reserve Bank of India’s Monetary Policy Committee is expected to raise the repo rate by 25 basis points each in October and December 2026, taking it from the current 5.25% to 5.75%, according to Japanese brokerage Nomura’s latest forecast.

Story first published: Wednesday, September 30, 2026, 8:14 [IST]

Other articles published on Sep 30, 2026

Read More

Previous Post

தாராபுரத்தில் இன்று ஸ்டாலின் பிரச்சாரம்.. காலை ரோடு ஷோ மாலை பொதுக்கூட்டம்.. திமுக மாஸ் திட்டம் | DMK Chief MK Stalin to will be campaign in Dharapuram today

Next Post

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Next Post
Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? – ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Flydubai-ல் இந்திய விமானிக்கு கத்திக்குத்து; ஈரானுக்குத் தொடர்பா? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin